உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:கல்யாண பரிசு

ஆண்டு:1959

பாடகி : பி. சுஷீலா

இசை : ஏ.எம். ராஜா

✨✨✨✨✨✨✨✨✨

 உன்னைக்கண்டு

நான் ஆட என்னைக்கண்டு

நீ ஆட 

உல்லாசம் பொங்கும்

இன்ப தீபாவளி

 ஊரெங்கும்

மகிழ்ந்து ஒன்றாக

கலந்து உறவாடும்

நேரமடா உறவாடும்

நேரமடா

{ கன்னத்தில்

ஒன்னே ஒன்னு கடனாக

தாடா கண்ணுக்குள்

விளையாடும் கலையே

நீ வாடா } (2)

 எண்ணத்தில்

உனக்காக இடம் நான்

தருவேன் 

எண்ணத்தில்

உனக்காக இடம்

தருவேன்

எனக்கு இனி

நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா

வளர்ந்தாலே போதுமடா

{ சித்திர பூப்போல

சிதறும் மத்தாப்பு தீயேதும்

இல்லாமல் வெடித்திடும்

கேப்பு } (2)

முத்திரை

பசும்பொன்னே ஏன்

இந்த சிரிப்பு 

முத்திரை

பசும்பொன்னே ஏன்

இந்த சிரிப்பு

முகமோ மலரோ

இது என்ன ரசிப்பு மின்னொளி

வீசும் உன் எழில் கண்டால்

வேறென்ன வேணுமடா..

வேறென்ன வேணுமடா

 உன்னைக்கண்டு

நான் ஆட என்னைக்கண்டு

நீ ஆட உல்லாசம் பொங்கும்

இன்ப தீபாவளி

ஊரெங்கும்

மகிழ்ந்து ஒன்றாக

கலந்து உறவாடும்

நேரமடா உறவாடும்

நேரமடா

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்