என்னைப் பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:புன்னகை தேசம்

இசை:S.A.ராஜ்குமார்

பாடியவர்: ஹரிஹரன்

வரிகள்:வைரமுத்து

✨✨✨✨✨✨✨✨✨

என்னைப் பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்


என் தாகம் தீர 

உந்தன் பெயரை சொல்லி 

சொல்லிப் பாடுகின்றேன்

இமைகள் திறந்து பார்த்ததும் 

எதிரில் வேண்டும் உன் முகம் 

எனது சுவாசம்  உன்வசம்


என்னைப் பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்

தாய் அன்று 

கொடுத்த முத்தங்கள் கூட 

உன் கிள்ளல் போல சுகமாயில்லை


மூங்கிலில் பாடும் 

ராகத்தில் கூட 

நீ திட்டும் அழகின் இதமே இல்லை.


உன் பேச்சில் தெறிக்கும் 

எச்சில் துளி. 

மோட்சத்தை அடைய 

சொல்லும் வழி.


நான் ஆலயம் சென்று 

பார்க்கிறேன் அங்கு 

சாமி உன் சாயலில்.

என்னைப் பாட வைத்த 

பேசும் பூவே 

உன்னை எண்ணி 

வாழுகின்றேன்

பூவுக்குள் வாசம் 

பொழுதானால் தீரும் 

உன் வாசம் 

என்றும் தீராதம்மா


ஒலியரை யாவும் 

சிலநேரம் தூங்கும் 

உன் நேசம் 

என்றும் நீங்காதம்மா


அன்பே நீ சிரித்தால் 

சிரிப்புகள் என் வாழ்வில் 

கிடைத்த கவிதைகள்


உன்னை காணத்தான் 

கண்கள் வாங்கினேன் 

உன்னைக் காண 

நெஞ்சம் துடிக்கின்றதே.

என்னைப் பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்

என் தாகம் தீர 

உந்தன் பெயரை சொல்லி 

சொல்லிப் பாடுகின்றேன்

இமைகள் திறந்து பார்த்ததும் 

எதிரில் வேண்டும் உன் முகம். 

எனது சுவாசம்  உன்வசம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்