யார் வந்து பூவுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியதோ புன்னகை வெட்கம் புரிகிறதே
✨✨✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨✨✨
படம்: கண்டேன் சீதையை
ஆண்டு:2000
இசை:V.S.உதயா
பாடியவர்:உன்னி க்ருஷ்ணன்
வரிகள்:ஸ்னேகன்
✨✨✨✨✨✨✨✨✨
யார் வந்துப் பூவுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியதோ புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகைவண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எரிகிறதே
வண்ணத்துப்பூச்சிகள் வானவில்லை சூடியதோ
வாலிபத் திரைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில் சேர்ந்திடக் கூடும்
திசை மாறும் போதும் தென்றல் பூக்களை மோதும்
யார் வந்து பூவுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியதோ புன்னகை வெட்கம் புரிகிறதே
✨
முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
ஆடை மறைவில் ஓடை மீன்கள்
பரதம் தான் ஆடுதோ
ஓடும் முகிலைத் தேடிப் பிடித்து வானம் முகம் மூடுதோ
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள் அலைப்போலே வந்து
பாடுது காவடிச்சிந்து
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அணைப் போட்டால் கூட
ஆனந்த மௌனம் இன்று
யார் வந்துப் பூவுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியதோ புன்னகை வெட்கம் புரிகிறதே
✨
புதுப்புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடிப் போலே வந்ததோ
புதுப்புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடிப் போலே வந்ததோ
சிட்டுக்குருவி சிறகை வாங்கிப் பறக்கத் தான் தோன்றுதோ
வெட்ட வெளியில் எட்டுப் போட்டு ஓடத்தான் தோன்றுதோ
சந்தோஷப் போர்க்களம் ஆரம்பம்
மழைக்கொட்டும்போதும் வானத்தைப் பார்த்திடத் தோன்றும்
சந்தோஷப் போர்க்களம் ஆரம்பம்
மல்லிகைப்பூவில் ஆடைகள் தைத்திடத் தோன்றும்
✨
யார் வந்து பூவுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியதோ புன்னகை வெட்கம் புரிகிறதே
✨
யார் வந்து மனசுக்குள்
புகைவண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எரிகிறதே
வண்ணத்துப்பூச்சிகள் வானவில்லை சூடியதோ
வாலிபத் திரைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில் சேர்ந்திடக்கூடும்
✨
திசை மாறும் போதும் தென்றல் பூக்களை மோதும்
யார் வந்து பூவுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியதோ புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகைவண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எரிகிறதே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக