வண்ணமொழி மானே வெள்ளி மீனே
மனைவியின் பெருமை
உணர்த்தும் பாடல்
✨✨✨✨✨✨✨✨✨
படம்:சேதுபதி I.P.S
இசை:இளையராஜா
ஆண்டு: 1994
வரிகள்:வைரமுத்து
பாடியவர்:K.J.ஜேசுதாஸ்
✨✨✨✨✨✨✨✨✨
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
என்னுடைய பேரும்
கொண்ட சீரும்
உனைச்சேரும்
வெற்றி எனும் மாலை
ஒரு காளை
பெறும் வேலை
பக்க பலம் பெண்தான்
எனக்கூறும் தமிழ் மண்தான்
முன்னணியில் விளங்க
இங்கு நீ வேண்டும்
பின்னணியில் துலங்கும்
சக்தி நீயாகும்
✨
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
✨
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கஸ்தூரி என்றொரு
குலப் பெண்தானம்மா
கணவன் காந்தி
புகழ் பெற வாய்த்தாள்
நாகம்மை என்றொரு
தமிழ் பெண்தானம்மா
தந்தை பெரியார்
பெருமையை காத்தாள்
மாவீரன் நேருவின்
ஆதாரம்தான்
அஞ்சாத மனைவியின்
அன்பு மனம்தான்
கமலா நேரு
அவள் பேர்தானம்மா
புகழ்ந்தே பேசும்
இந்த ஊர்தானம்மா
அதுபோல் எனக்கு
நீதான் ஆதாரம்
✨
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
✨
கண்ணே உன் நாயகன்
காவல் துறையிலே
கடமை உணர்ந்து
உழைத்திடும்போது
ஊராரைக் காத்திடும்
உயர்ந்த பணியிலே
இரவோ பகலோ
உறக்கம் ஏது
காற்றோடு இடி மழை
வந்தாலுமே
காப்பாற்றப் போவது
எங்கள் இனமே
காவல் காரன்
தொழில் சுலபம் அல்ல
வார்த்தை ஏது
இதன் புனிதம் சொல்ல
ஒருநாள் எனைத்தான்
தேசம் பாராட்டும்
✨
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
என்னுடைய பேரும்
கொண்ட சீரும்
உனைச்சேரும்
வெற்றி எனும் மாலை
ஒரு காளை
பெறும் வேலை
பக்க பலம் பெண்தான்
எனக்கூறும்
தமிழ் மண்தான்
முன்னணியில் விளங்க
இங்கு நீ வேண்டும்
பின்னணியில் துலங்கும்
சக்தி நீயாகும்
✨
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக