கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
✨✨✨✨✨✨✨✨✨
படம்: என் அண்ணன்
இசை: கே வி மகாதேவன்
பாடியவர் :டி.எம் சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன் ஆண்டு: 1970
✨✨✨✨✨✨✨✨✨
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
✨
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
✨
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
✨
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
✨
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
✨
சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
✨
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக