புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
✨✨✨✨✨✨✨✨✨
படம்: செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்கள்:அருண்மொழி,ஸ்வர்ணலதா
வரிகள்:வாலி
ஆண்டு:1994
✨✨✨✨✨✨✨✨✨
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
✨
கனவானதே பல கனவானதே...
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
✨
என்னோடு பேசும் இளம் தென்றல் கூட
என் கேள்விக்கென்று பதில் கூறுது
சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும்
முன்னாலே வந்து பதில் கூறு நீ
✨
என் கண்கள் சொல்லும்
என் கண்கள் சொல்லும்
மொழி காதலே
என்றென்றும் செல்லும் விலகாமலே
தனியாக நின்றாலும் உன் தாகமே
துணையாக வந்தாலும் தணியாதது
✨
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
✨
அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும்
அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும்
தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல்
ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்
அலை ஓய்ந்து போகும்
✨
அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே
நிலையான காதல் ஓயாதம்மா
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே
என்னோடு நீ தானே என் ஜீவனே...
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
✨
பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
கனவானதே பல கனவானதே...
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக