நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
✨✨✨✨✨✨✨✨✨
படம்:தெனாலி ராமன்
இசை:டி.இமான்
ஆண்டு:2014
வரிகள்:விவேகன்
பாடியவர்:ஹரிஹரசுதன்
✨✨✨✨✨✨✨✨✨
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
காலம் நமது கையில் வந்து சேருமே
கண்ணீர் என்றால் என்ன கண்கள் கேட்குமே
அட வசந்தங்கள் தோன்றும்
மன வருத்தங்கள் தீரும்
இனி வாழ்க்கை எல்லாம் வானவில்லாய் மாறும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
✨
ஓ… புயலின் வேகம் தீண்டி மரங்கள் கீழே சாயும்
மரங்கள் சாய்ந்தால் என்ன விதைகள் தூவி போகும்
கடுகின் அளவு நம்பிக்கை இருந்தால் கடலும் சிறுதுளி தானே
வழியில் தெளிவும் மனதில் உறுதியும் இருந்தால் உயர்ந்திடுவோமே
காற்றோடு வாசம் நீந்தும் கண்ணுக்கு தெரிவது இல்லை
உனக்குள்ளே எல்லாம் உண்டு அதை நீ அறிவது இல்லை
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
✨
தலையே சுமைதான் என்று நினைக்கும் ஆளும் உண்டு
மலையே வந்தால் கூட சுமக்கும் ஆளும் உண்டு
துணிவை நாமும் துணையாய் கொண்டு போவோம் மேலே மேலே
இதயம் பறவையாகும் பொழுது இமயம் காலின் கீழே
விலகாத பனியும் இல்லை விடியாத நாளும் இல்லை
உடையாத தடைகள் இல்லை உனக்கிணை யாரும் இல்லை
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக