கானலுக்குள் மீன் பிடித்தேன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: காதல் பரிசு

பாடியவர்: பி. சுசிலா

வரிகள் :ந.காமராசன்

இசை: இளையராஜா 

ஆண்டு: 1987 

✨✨✨✨✨✨✨✨✨

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன் 

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

 கானலுக்குள் மீன் பிடித்தேன் 

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே 

மீனை நான் ஓட விட்டேனே...ஏ...

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன்

 காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் 

காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பெண்: உன்னை எங்கோ பார்த்தேன் ஒரு நாள் காவியம் 

என்னை என்ன கேட்டாய் மறு நாள் நாடகம்

பெண்: அன்பின் வாசல் போடும் திரைகள் ஆயிரம்

 இன்பம் இங்கே நாளும் இருளின் ஓவியம் பாதையுண்டு ஹோ..ஹோ.. 

ஊர்கள் இல்லை ஹோ ஹோ...

பெண்: பாதையுண்டு ஊர்கள் இல்லை

 பாடல் உண்டு மேடை இல்லை

 வீணையுண்டு மீட்டும் நேரம் கைகள் இல்லை இங்கே

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன்

 காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன்

 காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பெண்: கண்ணீர் கங்கை பாயும் கரை மேல் வாழ்கிறேன்

 என் மேல் என்ன கோபம் விதியை கேட்கிறேன்

பெண்: நெஞ்சம் என்னும் பூவோ சருகாய் ஆனதே அன்பில் சிந்தும் தேனோ விஷமாய் போனதே தீபம் இங்கே ஹோ..ஹோ

 கோவில் இங்கே ஹோ..ஹோ

பெண்: தீபம் இங்கே கோவில் இங்கே தெய்வம் எங்கே

 காதல் நெஞ்சே 

சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம்

 சொந்தம் ஒன்று தேடும்

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன்

 காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே 

பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே...ஏ..

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூ மானே.......

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்