ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே(பெண் பதிப்பு)
✨✨✨✨✨✨✨✨✨
படம்: கழுகு
ஆண்டு:2013
பாடகி : பிரியா ஹிமேஷ்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
✨✨✨✨✨✨✨✨✨
பெண் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே
✨
பெண் : அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள ஏதோ பேசுதே
✨
பெண் : அடடா இந்த மனசுதான்
சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான்
தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே
✨
பெண் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே
✨
பெண் : கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே…. காய்ச்சலா மாறும்..
✨
பெண் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே… மார்கழி மாசம்..
✨
பெண் : அருகில் உந்தன் வாசம்
இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது
✨
பெண் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வேனடா
✨
பெண் : ஒன்னா ரெண்டா என்ன
நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச… தைரியம் இல்ல…
✨
பெண் : உள்ள ஒரு வார்த்த
வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
இருந்தும்… வெட்கத்தில் செல்ல…
✨
பெண் : காலம் யாவும் நாளும்
உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன்
மடியில் சாய்ந்தே சாகனும்
✨
பெண் : உன்ன தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோட வாழாம
மண்ணோடு சாயாதடா…
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக