நீயல்லால் தெய்வமில்லை!
✨✨✨✨✨✨✨✨
• பாடியவர்: பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
• இசை: டி. பி. ராமச்சந்திரன்
• வரிகள்: டாக்டர் உளுந்தூர்பேட்டை சண்முகம்
✨✨✨✨✨✨✨✨
நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!
(முருகா முருகா முருகா...)
✨
தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்!
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்!
தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்!
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்!
✨
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் ஞான குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவேணி என்றும் என் உள்ளம் நிறைந்தாய்!(2)
✨
நாயேனை நாளும் நல்லவனாக்க(2)
ஓயாமல் ஒழியாமல் உன் அருள் தந்தாய்!(2)
நீயல்லால் தெய்வமில்லை.
✨
வாயார பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளில் இன்பம்!
வாயார பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாள் இன்பம்!
✨
தூயா முருகா மாயோன் மருகா
தூயா முருகா மாயோன் மருகா
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
✨
நீயல்லால் தெய்வமில்லை..(2)
✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக