ஒரு தெய்வம் தந்த பூவே… கண்ணில் தேடல் என்ன தாயே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் கன்னத்தில் முத்தமிட்டால்

ஆண்டு: 2002 

பாடியவர்கள்: சின்மயிஸ்ரீபதா , 

பி ஜெயச்சந்திரன் 

இசை: ஏ. ஆர். ரகுமான் 

வரிகள்: வைரமுத்து 

✨✨✨✨✨✨✨✨

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…

காதில் தில் தில் தில் தில்…

கன்னத்தில் முத்தமிட்டால் நீ…

கன்னத்தில் முத்தமிட்டால்…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…

காதில் தில் தில் தில் தில்…

கன்னத்தில் முத்தமிட்டால் நீ…

கன்னத்தில் முத்தமிட்டால்…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…

கண்ணில் தேடல் என்ன தாயே…

ஒரு தெய்வம் தந்த பூவே…

கண்ணில் தேடல் என்ன தாயே…

பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…

ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…

வானம் முடியுமிடம் நீதானே…

காற்றைப் போல நீ வந்தாயே…

சுவாசமாக நீ நின்றாயே…

மார்பில் ஊறும் உயிரே…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…

கண்ணில் தேடல் என்ன தாயே…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…

காதில் தில் தில் தில் தில்…

கன்னத்தில் முத்தமிட்டால் நீ…

கன்னத்தில் முத்தமிட்டால்…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…

காதில் தில் தில் தில் தில்…

கன்னத்தில் முத்தமிட்டால் நீ…

கன்னத்தில் முத்தமிட்டால்…

பெண் : எனது சொந்தம் நீ…

எனது பகையும் நீ…

காதல் மலரும் நீ…

கருவில் முள்ளும் நீ…

பெண் : செல்ல மழையும் நீ…

சின்ன இடியும் நீ…

செல்ல மழையும் நீ…

சின்ன இடியும் நீ…

பெண் : பிறந்த உடலும் நீ…

பிரியும் உயிரும் நீ…

பிறந்த உடலும் நீ…

பிரியும் உயிரும் நீ…

மரணம் ஈன்ற ஜனனம் நீ…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…

கண்ணில் தேடல் என்ன தாயே…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…

காதில் தில் தில் தில் தில்…

கன்னத்தில் முத்தமிட்டால் நீ…

கன்னத்தில் முத்தமிட்டால்…

பெண் : எனது செல்வம் நீ…

எனது வறுமை நீ…

இழைத்த கவிதை நீ…

எழுத்துப் பிழையும் நீ…

இரவல் வெளிச்சம் நீ…

இரவின் கண்ணீர் நீ…

இரவல் வெளிச்சம் நீ…

இரவின் கண்ணீர் நீ…

பெண் : எனது வானம் நீ…

இழந்த சிறகும் நீ…

எனது வானம் நீ…

இழந்த சிறகும் நீ…

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…

கண்ணில் தேடல் என்ன தாயே…

ஒரு தெய்வம் தந்த பூவே…

கண்ணில் தேடல் என்ன தாயே…

பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…

வானம் முடியுமிடம் நீதானே…

காற்றைப் போல் நீ வந்தாயே…

சுவாசமாய் நீ நின்றாயே…

மார்பில் ஊறும் உயிரே…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…

கண்ணில் தேடல் என்ன தாயே…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்