நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ரிதம்

ஆண்டு: 2000 

பாடகா் : உன்னி மேனன்

இசை : எ.ஆர். ரகுமான்

வரிகள்: வைரமுத்து 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : { தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா திரனா } (2)

ஆண் : நதியே நதியே

காதல் நதியே நீயும்

பெண்தானே அடி நீயும்

பெண்தானே

ஆண் : ஒன்றா இரண்டா

காரணம் நூறு கேட்டால்

சொல்வேனே நீ கேட்டால்

சொல்வேனே

ஆண் : { தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா திரனா } (2)

ஆண் : நடந்தால் ஆறு

எழுந்தால் அருவி நின்றால்

கடல் அல்லோ சமைந்தால்

குமரி மணந்தால் மனைவி

பெற்றால் தாய் அல்லோ

ஆண் : { சிறு நதிகளே

நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே

நுரைகளில் இவள் முகமே } (2)

ஆண் : தினம் மோதும்

கரை தோறும் அட ஆறும்

இசை பாடும்

பெண் : ஜில் ஜில் ஜில்

என்ற ஸ்ருதியிலே

ஆண் & பெண் : 

கங்கை

வரும் யமுனை வரும்

வைகை வரும் பொருணை

வரும்

பெண் : ஜல் ஜல் ஜல்

என்ற நடையிலே

ஆண் : தினம் மோதும்

கரை தோறும் அட ஆறும்

இசை பாடும்

பெண் : ஜில் ஜில் ஜில்

என்ற ஸ்ருதியிலே

ஆண் : கங்கை வரும்

யமுனை வரும் வைகை

வரும் பொருணை வரும்

பெண் : ஜல் ஜல் ஜல்

என்ற நடையிலே

ஆண் : காதலி அருமை

பிரிவில் மனைவியின்

அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய்

கோடையிலே

ஆண் : வெட்கம் வந்தால்

உறையும் விரல்கள்

தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று

வாடையிலே

ஆண் : { தண்ணீர் குடத்தில்

பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில்

முடிக்கிறோம் ஓஹோ } (2)

ஆண் : { தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா திரனா } (2)

ஆண் : வண்ண வண்ண

பெண்ணே வட்டமிடும்

நதியே வளைவுகள் அழகு

உங்கள் வளைவுகள் அழகு

ஆண் : ஹோ.. மெல்லிசைகள்

படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே அது

நங்கையின் குணமே

ஆண் : { சிறு நதிகளே

நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே

நுரைகளில் இவள் முகமே } (2)

ஆண் : { தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா திரனா } (2)

ஆண் : தேன்கனியில்

சாராகி பூக்களிலே

தேனாகி பசுவினிலே

பாலாகும் நீரே

ஆண் : தாயருகே சேயாகி

தலைவனிடம் பாயாகி

சேயருகே தாயாகும்

பெண்ணே

ஆண் : பூங்குயிலே

பூங்குயிலே 

பெண்ணும்

ஆறும் வடிவம் மாறக்கூடும்

நீர் நினைத்தால் பெண்

நினைத்தால் கரைகள் யாவும்

கரைந்து போக கூடும்

ஆண் : நதியே நதியே

காதல் நதியே நீயும்

பெண்தானே அடி நீயும்

பெண்தானே

ஆண் : ஒன்றா இரண்டா

காரணம் நூறு கேட்டால்

சொல்வேனே நீ கேட்டால்

சொல்வேனே

ஆண் : { தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா திரனா } (2)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்