ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:கந்தன் கருணை

ஆண்டு:1967

இசை:கே.வி.மகாதேவன்

வரிகள்:கண்ணதாசன்

பாடியவர்:எஸ்.ஜானகி

சூலமங்கலம் ராஜலெட்சுமி,ரேணுகா

✨✨✨✨✨✨✨✨✨

ஆறு முகமான பொருள் 

வான் மகிழ வந்தான்

அழகன் இவன் முருகன் எனும் 

இனிய பெயர் கொண்டான்

ஆறு முகமான பொருள் 

வான் மகிழ வந்தான்

அழகன் இவன் முருகன் எனும் 

இனிய பெயர் கொண்டான் ( இசை )

கால மகள் பெற்ற மகன் 

கோல முகம் வாழ்க

கால மகள் பெற்ற மகன் 

கோல முகம் வாழ்க

கந்தன் என குமரன் என 

வந்த முகம் வாழ்க

கந்தன் என குமரன் என 

வந்த முகம் வாழ்க

இருவர் ஆறு முகமான பொருள் 

வான் மகிழ வந்தான்

அழகன் இவன் முருகன் எனும் 

இனிய பெயர் கொண்டான்

தாமரையில் பூத்து வந்த 

தங்க முகம் ஒன்று

தாமரையில் பூத்து வந்த 

தங்க முகம் ஒன்று

பண் நிலவின் சாரெடுத்து 

வார்த்த முகம் ஒன்று

பண் நிலவின் சாரெடுத்து 

வார்த்த முகம் ஒன்று

பால் மணமும் பூ மணமும் 

படிந்த முகம் ஒன்று

பால் மணமும் பூ மணமும் 

படிந்த முகம் ஒன்று

பாவலர்க்கு பாடம் தரும் 

பளிங்கு முகம் ஒன்று

பாவலர்க்கு பாடம் தரும் 

பளிங்கு முகம் ஒன்று

வேல் வடிவில் கண்ணிரண்டும் 

விளங்கு முகம் ஒன்று

வேல் வடிவில் கண்ணிரண்டும் 

விளங்கு முகம் ஒன்று

வெள்ளி ரதம் போல வரும் 

பிள்ளை முகம் ஒன்று

வெள்ளி ரதம் போல வரும் 

பிள்ளை முகம் ஒன்று

ஆறு முகமான பொருள் 

வான் மகிழ வந்தான்

அழகன் இவன் முருகன் எனும் 

இனிய பெயர் கொண்டான்

ஆறு முகமான பொருள் 

வான் மகிழ வந்தான்

அழகன் இவன் முருகன் எனும் 

இனிய பெயர் கொண்டான்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்