மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பாச மலர்

ஆண்டு:1961

பாடியவர்:T.M.S

இசை:M.S.V

வரிகள்:கண்ணதாசன்

✨✨✨✨✨✨✨✨✨

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்

வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்

வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்

கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்

கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை

மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை

மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்

மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்

மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்

மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்

கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்

அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்

வாழிய கண்மணி வாழிய என்றான்

வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்

கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்

பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்

பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

மாமனைப் பாரடி கண்மணி என்றாள்

மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்

வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்

கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்