கணேச பஞ்சரத்னம்
ஆதிசங்கரர் அருளிய "கணேச பஞ்சரத்னம்"
✨✨✨✨✨✨✨✨✨
1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்.
✨
மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதி கொண்டோரைக்காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்று வணங்கியவரை குறைதீர்த்துக்காப்பவர்.
✨
2.நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்
✨
வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிரளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங் களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.
✨
3.ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
✨
கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். அவர் மேலும் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி, தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நன் மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.
✨
4.அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்
✨
ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர்.பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.
✨
5.நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்
✨
மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.
✨
6.மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்
.....கணேசபஞ்சரத்நம் ஸம்பூர்ணம்
✨
இந்த கணேச பஞ்சரத்னத்தை எவன் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறானோ, அவன் நோயின்றி குறை யேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைஸ்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக