கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
✨✨✨✨✨✨✨✨✨
படம்: பெற்றால்தான் பிள்ளையா
ஆண்டு:1966
இசை:M.S.V
வரிகள்:வாலி
பாடியவர்கள்:T.M.S & P.சுசீலா
✨✨✨✨✨✨✨✨✨
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
✨
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
✨
பிள்ளை மொழியோ
அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ
அன்பைக் கொள்ளையிடுமோ ஓ.ஹோ ஓஒ ஓ
✨
பிள்ளை மொழியோ
அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ
அன்பைக் கொள்ளையிடுமோ
✨
முத்து சிரிப்போ
அது முல்லை விரிப்போ
நித்தம் கத்தும் குயிலோ
அது கண்ணன் குரலோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஓ ஓ ஓ
✨
முத்து சிரிப்போ
அது முல்லை விரிப்போ
நித்தம் கத்தும் குயிலோ
அது கண்ணன் குரலோ
என்னை மறந்தேன்
நான் உன்னை மறந்தேன்
இன்று தன்னை இழந்தேன்
சுகம் தன்னில் விழுந்தேன்
✨
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
✨
கன்னங்கருப்போ
சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ
அது இன்பத்தவிப்போ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஓ ஓ ஓ
✨
கன்னங்கருப்போ
சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ
அது இன்பத்தவிப்போ
✨
தொட்ட குறையோ
முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ
இல்லை என்ன நடிப்போ (2)
✨
கண்ணை அளந்தேன்
அதில் பொன்னை அளந்தேன்
பிள்ளை நெஞ்சை அளந்தேன்
புதுப் பூவை அளந்தேன்
✨
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
✨
ஆஆ..ஹா..ஆஆஆஅ.ஆ.
கண்ணில் எடுத்தேன்
நெஞ்சைக் கையில் கொடுத்தேன்
சொல்லத் துடித்தேன்
அதை சொல்லி முடித்தேன்
சொல்லத் துடித்தேன்
அதை சொல்லி முடித்தேன்
✨
ராதை நினைப்பாள்
அங்கு கண்ணன் இருப்பான்
அந்த கோதை சிரிப்பாள்
அதைக் கண்டு ரசிப்பான்
அதைக் கண்டு ரசிப்பாள்
✨
ஒன்றை நினைத்தேன்
அந்த ஒன்றை அடைந்தேன்
உண்மை அன்பைத் தருவேன்
அந்த அன்பைப் பெறுவேன்
✨
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக