புது சூரியன் என் வீட்டிலே அழகாகத்தான் விளையாடுதே
✨தாயின் அன்பை✨
✨உணர்த்தும் பாடல்✨
✨✨✨✨✨✨✨✨
படம்: பட்டாஸ்
இசை:விவேக் மெர்வின்
பாடியவர்:அனுராதா ஸ்ரீராம்
வரிகள்:உமாதேவி
✨✨✨✨✨✨✨✨
புது சூரியன் என் வீட்டிலே
அழகாகத்தான் விளையாடுதே
இரு தோளிலும் சுகம் கூடுதே
உன்னை தூக்கி நான் பசி ஆறுவேன்
✨
அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே
✨
வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே
✨
கடல் தாண்டி நீரும் போய் விடுமா
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
✨
அனுதினம் உன்னை
நினைக்கையில் மனம்
அணு அணுவாய் துடிக்குது வா
திருமுகம் தந்து
சிறு விரல் கொண்டு
பெரு வலிகளை துடைத்திட வா
மறுபடி உன்னை மடியினில் பெற
கருவறை தவம் கிடக்குது வா
✨
நீயின்றி நான் வாழ
ஆரம்பம் ஏதிங்கே
நீதானே நான் வாழ
ஆதரவா அன்பே
✨
வான் தாண்டி சூரியனும்
தூரங்கள் போய்விடுமா
தாய் போல வாழ்வெல்லாம்
நியாயங்கள் தோன்றுமா
✨
தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ
தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ
✨
அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே
✨
வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே
✨
கடல் தாண்டி நீரும் போய் விடுமா…..
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
கடல் தாண்டி நீரும் போய் விடுமா……
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக