ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

 ✨

அருமையான பாடல்....

சித்ரா மா குரலை மாற்றி அற்புதமாக பாடியிருக்கிறார்.... 

படம்:வனஜா கிரிஜா 

ஆண்டு:1994

இசை:இளையராஜா

ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன

உங்க வழி துணைக்கு நானும் வரவா

உங்க வாய் துணைக்கு பேச்சு தரவா

இந்த கன்னி பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப்போடுங்க

ஆ..ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

சாலையிலே ஆடுது… சாமி வச்ச பூமரம்

உன்பேரத்தான் பாடுது அம்மன் கோவில் கோபுரம்

வானம் பாத்து நிக்காமலே வளர்ந்த பயிரு யாராலைய்யா

வாய்க்கால் நீரு வத்தாமலே ஓடி வருது உன்னாலைய்யா

இங்கு எல்லாமே நீ தானய்யா.. நீ இல்லாம ஊரேதய்யா

ஆ..ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன

ஏறெடுத்து பாத்துட்டா ஏவல் செய்ய ஆள் வரும்

கண்ணசைச்சி காட்டிட்டா கைய கட்டி ஊர் வரும்

உந்தன் பக்கம் நானும் வர..

 என்ன தவம் செஞ்சேனய்யா

ஒட்டுறவா நானிருப்பேன் இட்ட பணி செய்வேனய்யா

உந்தன் துணையாக நானில்லையா

இனி தனியாக நீயில்லைய்யா

ஆ..ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன

உங்க வழி துணைக்கு நானும் வரவா

உங்க வாய் துணைக்கு பேச்சு தரவா

இந்த கன்னி பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப்போடுங்க

ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே

சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்