கல்லுக்குளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
✨✨✨✨✨✨✨✨✨
படம்:மனிதனின் மறுபக்கம்
ஆண்டு: 1986
இசை: இளையராஜா
வரிகள்: கவிஞர் புலமைபித்தன்
பாடியவர்கள்: S.P.B & ஜானகி
✨
கல்லுக்குளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
✨
கல்லுக்குளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்
கல்லுக்குளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
✨
வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரை சிந்தும்
சொந்தம் என்னம்மா
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே
நெஞ்சத்தின் தாகம் என்று
தீரும் சொல்லம்மா
காலங்கள் செல்ல செல்ல
ஆயுள் நின்று போகும்
ஆனாலும் காதல் என்னும்
சொந்தம் என்றும் வாழும்
நீலம் பூத்த கண்கள் ரெண்டும்
உன்னை வைத்துக் கொள்ளட்டும்
நீயும் நானும் மாலை சூடும்
காலம் எந்த காலம் இந்த
✨
கல்லுக்குளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணே என்றென்றும்
கல்லுக்குளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
✨
பூவுக்கு தாலி கட்ட போகும்
தென்றல் காத்து
போகட்டும் நீயம் இன்று
வாழ்த்துச் சொல்லி போ
காதுக்குள் நாளை அந்த
மேள சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம்
மாலை கட்டித்தா...
தாளத்தை தள்ளி வைத்து
ராகம் எங்கு போகும்
பாசத்தை தள்ளி வைத்து
ஜீவன் எங்கு வாழும்
பொன்னில் பாதி பூவில் பாதி
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்
காதல் வேதம் கண்ணில் ஓதும்
கண்ணே கட்டி பொன்னே இந்த
✨
கல்லுக்குளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்
கல்லுக்குளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குளே அன்பின் பாரம் என்ன
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக