காதலுக்கு கண்கள் இல்லே மானே
✨✨✨✨✨✨✨✨✨
படம்:நாடோடி பாட்டுக்காரன்
ஆண்டு:1992
இசை:இளையராஜா
பாடியவர்கள்:S.P.B & ஸ்வர்ணலதா
வரிகள்:கங்கை அமரன்
✨✨✨✨✨✨✨✨✨
காதலுக்கு கண்கள்
இல்லே மானே
காதலுக்கு கண்கள்
இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன
வச்சேன் நானே
✨
காதல் ஒரு துன்பக்
கதையோ காலம் தந்த
மாய வலையோ
கங்கை வெள்ளம் கண்ணில்
கொண்டேன் நானே
✨
காதலுக்கு கண்கள்
இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன
வச்சேன் நானே
✨
என் ராகம் எல்லாம்
இங்கே நீ தானே
உன்னை எண்ணாத நாள்
ஏது பூ மானே
அடி உன்னோடு
நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில்
இங்கே சாயாது
✨
கங்கைக்கொரு கரை கட்டலாம்
காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கே வேலி கட்டலாமா
ஹே மண்ணில் வச்சு மூடும்
விதையாவும் பயிர் ஆகும்
மழை மேகம் நெருப்பாகி
போகாதம்மா
✨
காதலுக்கு கண்கள்
இல்லே ராசா
கண்ணுக்குள்ளே உன்ன
வச்சா ரோசா
காதலுக்கு கண்கள்
இல்லே ராசா
✨
தண்ணீரில் நீந்திச்
செல்லும் மீன் ஒன்று
சுடும் வெந்நீரில்
விழுந்தாலே என்னாகும்
இளம் பன்னீரில்
ஆடும் தங்க ரோஜாப்பூ
அது முள் மீது
விழுந்தாலே பொல்லாப்பு
✨
எப்பொழுதும் மனசில்
உன்னை எண்ணி எண்ணி
இருக்கும் என்னை
தடைதான் செய்வார் இங்கே யாரு
மெல்ல துள்ளி வரும் காத்து
தடை பாத்து தயங்காது
எந்நாளும் உன் நேசம்
மாறாதையா
✨
காதலுக்கு கண்கள்
இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன
வச்சேன் நானே
✨
காதல் ஒரு
துன்பக் கதையோ
காலம் தந்த
மாய வலையோ
கங்கை வெள்ளம் கண்ணில்
கொண்டேன் நானே
✨
காதலுக்கு கண்கள்
இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன
வச்சேன் நானே
✨
காதலுக்கு கண்கள்
இல்லே மானே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக