வேப்பம்பூ




இரத்தத்தைத் தூய்மை செய்து, நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. . தோலின்மீது தோன்றும் அரிப்பு, சிரங்கு, சொரி போன்றவற்றையும் விரைவில் குணப்படுத்துகிறது. 
வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை வலி, ஏப்பம், செரிமானமற்ற நிலை போன்றவற்றை வேப்பம்பூ குணப்படுத்துகிறது.
வேப்பம்பூவைத் தூய்மை செய்து, நெய்யில் வறுத்து, மிளகு சீரகத் தூளுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து, சூடாக உள்ள சாதத்தில் போட்டுச் சாப்பிட வேண்டும்.
உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும். காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம்.
வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். 
அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் நெருங்காது.

சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்