தீ திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : ப்ரம்மாஸ்த்திரம்

ஆண்டு:2022

இசை:ப்ரீதம்

பாடியவர்: ஸித் ஸ்ரீராம்

வரிகள் :மதன் கார்க்கி

✨✨✨✨✨✨✨✨✨

புனலோ அசையாமலே ஆடுதே

எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே

விண்ணெல்லாம் ஒளி மின்னும் அழகை 

இரு கையில் குவித்தான் அவன் உன்னை படைத்தான் 

இரவால் உன் கண்கள் செதுக்கி

நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான் 

தீ திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே

சிறு தீண்டல் இன்பத் தீ எந்தன் மேலே 

என் மீதி வாழ்வில் நீயே வேண்டுமே

உயிர் ஆனாய் என்றால் அது போதுமே

தீ திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே

சிறு தீண்டல் இன்பத் தீ எந்தன் மேலே 

என் மீதி வாழ்வில் நீயே வேண்டுமே

உயிர் ஆனாய் என்றால் அது போதுமே

நீ அதிகாலை கீற்றின் ஒலியா

மென் பேசும் காற்றின் மொழியா?

கண்ணாலே என்னை கொத்தி அழகாக்கும் ஆசை  உளியா?

நீ தரை விழுந்த விண்மீன் துகளா?

வெண்ணிலவின் கடைசி மகளா?

படைத்தவனின் பெருமை பேசும் நீதான் அவன் புகழா?

அண்டத்தின் இன்பத்தின் மொத்தத்தை

தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான்

இரவாய் உன் கண்கள் செதுக்கி

நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான் 

தீ திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே

சிறு தீண்டல் இன்பத் தீ எந்தன் மேலே 

என் மீதி வாழ்வில் நீயே வேண்டுமே

உயிர் ஆனாய் என்றால் அது போதுமே(2)

தீ திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே

சிறு தீண்டல் இன்பத் தீ எந்தன் மேலே ...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்