விண்வெளி நாயகா விடியல் வீரா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தக் லைஃப்

ஆண்டு:2025

பாடகர்கள் : ஸ்ருதி ஹாஸன் மற்றும் ஏ. ஆர். அமீன்

இசை : ஏ. ஆர். ரஹ்மான்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா மற்றும் ராப் : பிரஷாந்த் வெங்கட்

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : விண்வெளி நாயகா விடியல் வீரா

உயிரின் மேலே விருந்திட வா வா

வா வா வா வா வா வா

விண்வெளி நாயகா விடியல் வீரா

உயிரின் மேலே விருந்திட வா வா

வா வா வா வா வா வா

அழகிய நாயகா அருகில் நீ வா

இசையை போலே இனித்திட வா வா

வா வா வா வா வா வா

ராப் : ……………………

குழு : ...................

பெண் : அருவி நீ ..மௌனம் நீ

கலைகள் நீ ..நீ என் பிழை நீ

கவனம் நீ…. சலனம் நீ

முழுமை நீ …நீ என் பொன் சுமை நீ

அளவில்லா சுவை நீ

எனது முடி முதல் அடி வரை

அழகிய அலை அலை

இறைவனை தழுவிடும் மனநிலை

பெண் : அன்றொரு நாளிலே அலையின் மேலே

அலையை போன்றே கலந்து இருந்தோமே

கள்வரின் இரவிலே கனவின் உள்ளே

கனவை போலே விழித்து இருந்தோமே

தொலைந்த நேரமே கரைந்து பூக்கவே

திறந்து வா வா வா மாதவா வா

ஆண் : ……………..

குழு : ..............

ஆண் : யழுக்கா

குழு : ..................

பெண் : கனவில் நான் தொலைவில் நீ

பொழுதெல்லாம் தீ தேன் சிறகே

இருந்தும் நான் ரசிக்கிறேன்

நினைவெல்லாம் உன் …உன் மென் குரலே

திரும்பி வா விடியலே

உனது இரு விழி இமை வழி

அது தரும் ஒரு மொழி

விழி வழி பெரும் மொழி முகவரி

பெண் மற்றும் குழு : விண்வெளி நாயகா விடியல் வீரா

உயிரின் மேலே விருந்திட வா வா

அழகிய நாயகா அருகில் நீ வா

இசையை போலே இனித்திட வா வா

தொலைந்த நேரமே கரைந்து பூக்கவே

திறந்து வா வா வா மாதவா வா

ராப் : ……………………

குழு : ...................

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்