வானத்துல வெள்ளி ரதம் அது வீதியிலே வந்ததென்ன…

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : எங்க ஊரு மாப்பிள்ளை

வரிகள் :  வாலி 

பாடியவர்கள்: மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : வானத்துல வெள்ளி ரதம்

அது வீதியில வந்ததென்ன

பெண் : வீதியிலே வந்த ரதம்

ஒரு சேதி இங்கு சொன்னதென்ன

ஆண் : வண்ண ஆடை

கட்டி நின்றதென்ன

கண்ணார கண்டதென்ன

கையோடு கொண்டதென்ன

பெண் : வானத்துல வெள்ளி ரதம்

அது வீதியில வந்ததென்ன

ஆண் : வானத்துல வெள்ளி ரதம்….

ஆண் : மரக்கிளையில் காத்தடிக்க

பழம் உதிரும் சோலை இது

பெண் : பழுத்த பழம் காத்திருக்க

அணில் கடிக்கும் வேளை இது

ஆண் : அணில் போல் உருமாறவா

அடியேன் பசியாறவா

பெண் : அதற்கோர் தடை போடவா

உடையால் என்னை மூடவா

ஆண் : புதுப் பூவே நான் தொடும் போது

போதை வரக் கூடுமா

பெண் : பனிச்சாரல் மேல் விழும் போது

ஆசை அலை பாயுமா

ஆண் : நங்கையின் மெல்லிய இடை

நூல் போல் ஆட

என்னையும் உன்னையும்

இணைத்தேன் நான்

பெண் : வானத்துல வெள்ளி ரதம்

அது வீதியிலே வந்ததென்ன

ஆண் : வீதியிலே வந்த ரதம்

ஒரு சேதி இங்கு சொன்னதென்ன

பெண் : வண்ண ஆடை

கட்டி நின்றதென்ன

கண்ணார கண்டதென்ன

கையோடு கொண்டதென்ன

ஆண் : வானத்துல வெள்ளி ரதம்…ஹ்ஹீம்….

பெண் : நதியில் எழும் நீரலை போல்

நினைவில் எழும் நாயகி நான்

ஆண் : ராமன் எனும் ராஜனுக்கு

அமைந்து விட்ட ராணியும் நீ

பெண் : நெடு நாள் உள்ள சொந்தமோ

நிலையாய் வந்த பந்தமோ

ஆண் : பிரிவே இனி இல்லையே

பனிவாய் மடல் முல்லையே

பெண் : இளம் தோகை

தோள்களில் சாய

ஏனோ ஒரு ஏக்கமோ

ஆண் : மலர் மாறன்

பூக்களில் போடும்

பாணம் என்னைத் தாக்குமோ

பெண் : தொட்டதும் பட்டதும்

சுகமே தோன்ற

மன்னவன் கைகளில்

விழுந்தேன் நான்

ஆண் : வானத்துல வெள்ளி ரதம்

அது வீதியிலே வந்ததென்ன……

பெண் : வீதியிலே வந்த ரதம்

ஒரு சேதி இங்கு சொன்னதென்ன

ஆண் : வண்ண ஆடை

கட்டி நின்றதென்ன

கண்ணார கண்டதென்ன

கையோடு கொண்டதென்ன

பெண் : வானத்துல வெள்ளி ரதம்

அது வீதியில வந்ததென்ன

ஆண் : வானத்துல வெள்ளி ரதம்….

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்