சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : இரண்டில் ஒன்று 

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம் 

பாடியவர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்

மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா

மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா

பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா

கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

ஆண் : மார்கழிப் பனியினிலே…….

நல்லதோர் மோகம் கூடுதடி

மாந்தளிர் மேனி தொட்டால்

அது தானாக ஓடுதடி

பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு

அதைத் தாண்டாதே ஆசையினால்

பூ மாலையை நீ சூடும் அன்று

சுகம் தேனாகத் தேடி வரும்

ஆண் : காத்திருந்து காத்திருந்து

கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன

பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

பெண் : காய் ஒன்று கனியாமல்

அதை சுவைக்கின்ற ஆசை என்ன

கல்யாணம் ஆகாமல்

என்னைப் பெண்டாள நினைப்பதென்ன

ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது

என்றும் நீ தானே என் சொந்தம்

மாலை என்றும் ஒரு வேலி என்றும்

என்னை வாட்டாமல் கொண்டாடு

பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன்

மூளை கொஞ்சம் மாறியதென்ன

ஆண் : தீராது தீராது நோயும் தீராது

பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா

கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே….

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்