வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

 ✨✨✨✨✨✨✨✨✨

1978 இல் வெளியான  "தியாகம் "

திரைப்படம் தோல்வியை தழுவ நேர்ந்தது. படம் வெளிவந்து சில நாட்கள்  திரையரங்கில் கூட்டம் குறைந்தது. அப்போது இருந்த விவித் பாரதியும்,  ஆல் இந்தியா ரேடியோவும்  வானொலிப்பெட்டியில் 

இத்திரைப்படத்தின் 3  பாடல்களை  தினமும் 

ஒலிக்கச் செய்தது.

பின் யாரும்  எதிர்பாரா விதமாய் 

சில்வர் ஜுப்லி கொண்டாடியது இப்படம்.

அதில் ஒரு இனிய பாடல் 👇 

✨✨✨✨✨✨✨✨✨

படம்:தியாகம்

ஆண்டு:1978

இசை:இளையராஜா

ராகம்:ஆபேரி

வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்:S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨✨

வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்

அலையிலாடும் காகிதம்

ம்ம்.ம்.ம்ம்.ம்.ம்

அலையிலாடும் காகிதம்

அதிலும் என்ன காவியம்

நிலையில்லாத மனிதர்கள்

அவர்க்குமென்ன உறவுகள்

உள்ளம் என்றும் ஒன்று

அதில் இரண்டும் உண்டல்லவோ

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே

தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேளை திருவுளம்

நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா

உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்