நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : கிராமத்து மின்னல்

வரிகள் : கங்கை அமரன்

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன், சித்ரா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே


நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே

நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே


நீ நடந்து போகையில்

பாதம் நோகுமே

பூவப் போட்டுத் தாரேன்

அதில் நடந்து வாடி மானே

பூவப் போட்டுத் தாரேன்

அதில் நடந்து வாடி மானே


நீ போகும் பாதையில்

மனசு போகுதே ராசா

நீ போகும் பாதையில்

மனசு போகுதே ராசா


நீ நடந்து போகையில்

பாதம் நோகுமே

பூவப் போட்டுத் தாரேன்

அதில் நடந்து வாங்க ராசா

பூவப் போட்டுத் தாரேன்

அதில் நடந்து வாங்க ராசா


வானத்துல பூத்திருக்கும்

வைரமணிப் பூ எடுத்து

மாலை ஒண்ணு நான் தொடுத்து

ஓங்கழுத்தில் போடவா


பாதத்துக்கு ஓர் கொலுசு

வைரத்துல போடவா

மீதம் வரும் வைரங்கள

மின்மினிக்குச் சூடவா


ஆகாயத்தில் கோட்டை கட்டி

அரண்மனையை கட்டி அங்கே

காவலுக்கு தெய்வங்கள

போட உன்னால் ஆகாதையா


ஆசை கொண்டது

அன்பினாலதான்

அன்புதானே நம் செல்வம்


அந்த அன்பு ஒண்ணுதான்

நம்மச் சேர்த்தது


போதும் போதும் ராசா

அது ஒண்ணு போதும் ராசா

போதும் போதும் மானே

அது ஒண்ணு போதும் மானே


பள்ளிக்கூடம் போனதில்லை

பாடமும் படிச்சதில்லை

சொல்லி யாரும் கொடுக்கவில்லை

சொந்த புத்தி ஏதும் இல்லை


என்னைப் போல ஆம்பளைய

பாத்துக் கொள்ள யார் இருக்கா

ஒன்னைப் போல பொம்பளைக்கு

எத்தனையோ பேர் இருக்கா


சொன்னதையே சொல்லும் அய்யா

பச்சக் கிளிப் பிள்ளை அது

சொன்னதை நீ சொல்வதில்ல

ரெட்டச் சுழிப் பிள்ளை இது


அறிவுக்காகத்தான்

பாடம் கேக்கணும்

அன்பு கொள்ள அது வேணாமே


நல்ல மாலை வந்தது

வேளை வந்தது

மனசு சேர்ந்ததாலே

நம்ம மனசு சேர்ந்ததாலே


நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே

நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே


நீ நடந்து போகையில்

பாதம் நோகுமே

பூவப் போட்டுத் தாரேன்

அதில் நடந்து வாங்க ராசா


பூவப் போட்டுத் தாரேன்

அதில் நடந்து வாடி மானே.


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்