சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன் தாயி நீ கண்வளரு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:

ராஜகாளி அம்மன்

வருடம்:2000

இசை:SA ராஜ்குமார்

பாடலாசிரியர்:பழனி பாரதி

பாடகர்கள்:வடிவேலு, 

ஸ்வர்ணலதா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண்: சந்தன மல்லிகையில்

தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு

தாலேலல்லேலோ

ஆண்: வேப்பில வீசிகிட்டு

பாட்டு சொல்லுறேனே

கேட்டு நீ கண்வளரு

தாலேலல்லேலோ

ஆண்: இந்த உலகை ஆளும் தாயிக்கு

செல்ல பிள்ள நானிருக்கேன்

என் கவல தீர்க்க வேண்டாமா

கண்வளரு தாயி

ஆண்: சந்தன மல்லிகையில்

தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு

தாலேலல்லேலோ

ஆண்: பாம்பே தலையணதான்

வேப்பிலையே பஞ்சு மெத்த

ஆத்தா கண்வளர

ஆரிராரோ பாடும் புள்ள

ஆண்: எந்த ஒரு பிள்ளைக்குமே

இந்த வரம் கெடைக்கல

ஆனந்தம் பொங்குதம்மா

விட்டு விட்டு கண்ணுல

ஆண்: தாயி மகமாயி

நான் என்ன கொடுத்து வச்சேன்

பாதம் திருப்பாதம்

அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

ஆண்: சந்தன மல்லிகையில்

தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு

தாலேலல்லேலோ

பெண்: ஒருவாய் சோறுனக்கு

ஊட்டி விட்ட வேளையில

உலகம் பசி அடங்கி

உறங்குதம்மா நேரத்துல

பெண்: உதட்டு பருக்கையில

ஒன்னு ரெண்டு சிந்துதடி

அதநான் ருசி பாத்தே

மோட்சம் இங்கே வந்ததடி

பெண்: தாயே இனி நீயே

என் நெஞ்சினில் தங்கிவிடு

போகும் வழி யாவும்

நீ எங்களின் கூட இரு

பெண்: சந்தன மல்லிகையில்

தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு

தாலேலல்லேலோ

பெண்: வேப்பில வீசிகிட்டு

பாட்டு சொல்லுறேனே

கேட்டு நீ கண்வளரு

தாலேலல்லேலோ

பெண்: இந்த உலகை ஆளும் தாயிக்கு

செல்ல பிள்ள நானிருக்கேன்

என் கவல தீர்க்க வேண்டாமா

கண்வளரு தாயி

பெண்: சந்தன மல்லிகையில்

தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு

தாலேலல்லேலோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்