பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தங்க மனசுக்காரன்

ஆண்டு:1992

இசை:இளையராஜா

வரிகள்:பிறைசூடன்

பாடியவர்கள்:மனோ,S.ஜானகி

பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு

படிச்சுக்கத்தான் மனசிருக்கு

இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி

இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்

சேர்ந்து பாடடி

இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்

சேர்ந்து பாடடி

பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு

படிச்சுக்கத்தான் மனசிருக்கு

இந்த உடலுக்குள் வந்த உயிருக்குள்

வந்து புகுந்தவளே

அந்தி வெயிலுக்குள் அன்பு மலருக்குள்

என்றும் இனிப்பவளே

தட்டுத் தடைகளை வெட்டிக் களையணும்

தொட்டுத் தொடர்ந்து வர

தங்க மகளுக்கு தஞ்சம் கொடுத்திடும்

சிங்கம் அருகில் வர

சின்னஞ்சிறு நெஞ்சுக்குள்ளே

என்ன என்ன சேதிகளோ

சின்னப் பொண்ணு கண்ணுக்குள்ளே

மின்னுவது ஆசைகளோ

சொல்லும் சொல்லில் தேன் இருக்கு

சொர்க்கம் பக்கம்தான் இருக்கு

கையும் கையும் சேர்ந்திருக்கு

பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு

படிச்சுக்கத்தான் மனசிருக்கு

சிட்டுக் குருவியின் வட்டக் கருவிழி

கொட்டம் அடிக்கட்டுமே

கொட்டும் இசை அதில் கொஞ்சும் இளசுகள்

கட்டிப் புரளட்டுமே

பட்டுத் துணி என கொத்துக் கனி என

கன்னம் இருக்கட்டுமே

கொட்டிக் கொடுத்திட ஒட்டிக் களித்திட

உள்ளம் நெருங்கட்டுமே

பந்தி ஒன்னு போட்டிருக்கு

பந்தம் உள்ள மாமனுக்கு

சிந்து கவி வந்திருக்கு

சொந்தம் உள்ள பூங்கொடிக்கு

ஒண்ணா ரெண்டா வார்த்தை இங்கு

ஓயாதையா வாழ்க்கை இங்கு

மாறாதையா ஆசை இன்று

பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு

படிச்சுக்கத்தான் மனசிருக்கு

இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி

இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்

சேர்ந்து பாடடி

இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும்

சேர்ந்து பாடடி

பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு

படிச்சுக்கத்தான் மனசிருக்கு

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்