ஸ்ரீராமா வாராய் என் ராமா வரணும் நீ நிரந்தர ஒளி தர வரணும்

 ✨✨✨✨✨✨✨✨

படம்:ஸ்ரீராம ராஜ்ஜியம் 

ஆண்டு:2011

இசை :இளையராஜா வரிகள்: பிறை சூடன் 

பாடியவர்கள் :சாகேத், சின்மயி ஸ்ரீபதா 

✨✨✨✨✨✨✨✨

ஸ்ரீராமா வாராய் என் ராமா வரணும்

நீ நிரந்தர ஒளி தர வரணும்

சீதாராமா அருள்வாய் உன் வலிமை மனதில்

மறையும் ஓர் அசுரன் ஒழிய 

மன வீட்டின் குரோதங்களை 

வேர் வெட்டி வெளியேற்று

சுகமென்னும் நெய்யூற்றி இதயத்தில் விளக்கேற்று

என் ஜென்மம் புனிதம் ஆக்கிடவா

ஸ்ரீராமா வாராய் என் ராமா வரணும்

நீ நிரந்தர ஒளி தர வரணும்

தரிசனம் தினம் தேடி நெருங்கியே வந்தோம்

தயை புரிவாயே என் தாசரதி 

முதல் முதல் முன் நின்று நலம் உன்னை கேட்டோம் 

இதம் பதமாய் சொல்வாய் நற்செய்தி 

சூடும் மதியே கோடி நிதியே ஆளும் ரகுபதியே

மோக ஸ்வரமாய் சிநேக வரமாய் உன்னிடம் வசம் செய்தேன் 

எல்லாம் உனக்கொன்று யாவருக்கும் ராமன் அன்பொன்று 

சகல குண சோமனின் ஆதியை ராமனின் நீதியை புகழ்ந்திட மொழி இல்லையே 

என் ஸ்ரீராமா வாராய் என் ராமா வரணும்

நீ நிரந்தர ஒளி தர வரணும்

சீதாராமா அருள்வாய் உன் வலிமை.....

தாம்பூல ராகங்கள் தேவாம்ருதம் 

நான் கொஞ்சி சேவிக்கும் தருணம்

ஸ்ருங்கார ஸ்ரீராம சந்த்ரோதயம்

எந்நாளும் வைதேகி இதயம் 

மௌனம் கூட மதுரம்

காலம் எல்லாம் தொடரும்

இது ராமன் மோகலோகம் 

இது கோடி ஜென்ம சினேகம்

இங்கு தோன்றும் மோட்சம்

ரவி சோமன் காணும் உச்சம்

எந்நாளும் மாறிப் போகா பந்தமே

ஸ்ரீ ராமா ராமா ரகுராமா தொடரும் இனி மோகன சல்லாபம் 

சீதாராமா மோகம் சீதனமா 

ஹரிக்கே இதழ் சந்தன 

பந்தனமா 

ஸ்ரீ ராமனின் அனுராகம் சீதாபதி வைபோகம் 

ஸ்ரீ ராமனின் சுக வேதம்

ஸ்ரீ ஜானகி சுக நாதம்

எந்நாளும் மாறிப் போகா பந்தமே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்