பூவண்ணம் போல நெஞ்சம் ...

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அழியாத கோலங்கள்

ஆண்டு:1979

இசை:ஜெயச்சந்திரன், P.சுசீலா

வரிகள்:கங்கை அமரன்

இசை:சலீல் சௌத்ரீ

✨✨✨✨✨✨✨✨✨

பூவண்ணம் போல நெஞ்சம்

பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம் (2)

பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ

எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள்

என்றென்றும் நீ (2)

இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை

பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம் ....

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்

துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள்

என் இன்பங்கள் (2)

இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்

இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம் ....

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்