ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு  

பாடலாசிரியர் :  வைரமுத்து

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்  

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ

என் தெய்வமே இது பொய் தூக்கமா

நான் தூங்கவே இனி நாளாகுமா….

ஆராரிரோ பாடியதாரோ யாரோ


ஆண் : நீ முந்தி போனது

நியாயம் இல்லையே

நான் முந்தி போகவே

யோகம் இல்லையே


ஆண் : கூட்டை விட்டு தாய்க்கிளி

பறந்தது எங்கே

பசித்தவன் கேட்கிறேன்

பால் சோறு எங்கே

என் தேவியே நான் செய்த

குற்றம் என்ன கூறு

ஒரு பார்வை பாரு


ஆண் : ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ


ஆண் : பொழுதாகி போனதே

இன்னும் தூக்கமா

சொல்லாமல் போவது

தாயே நியாயமா


ஆண் : உயிர் தந்த தேவிக்கு

உயிர் இல்லையோ

பால் ஊட்டி பார்த்தியே

பால் ஊத்தலாமோ

அன்னம் போட்ட என் தாயே

உனக்கு அரிசி போட வந்தேன்

எனை நானே நொந்தேன்


ஆண் : ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ

என் தெய்வமே இது பொய் தூக்கமா

நான் தூங்கவே இனி நாளாகுமா


ஆண் : ஆராரிரோ பாடியதாரோ

தூங்கிப் போனதாரோ

யாரோ யாரோ

எனக்காரோ யாரோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்