ராம நாமம் ஒரு வேதமே...

 ✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

படம் : ஸ்ரீ ராகவேந்திரர் ஆண்டு: 1985

பாடல் : கவிஞர் வாலி

இசை : இசைஞானி இளையராஜா

பாடியவர் : K.J.ஜேசுதாஸ்

✨✨✨✨✨✨✨✨✨

ராம நாமம்

ஒரு வேதமே...(2)

ராக தாளமொடு

கீதமே...

மனம் எனும் வீணை

மீட்டிடுவோம்...

இசை எனும் மாலை

சூட்டிடுவோம்

அருள்மிகு

ராம நாமம்

ஒரு வேதமே..

ராக தாளமொடு

கீதமே...

அவன்தான் நாரணன்

அவதாரம்....ம்

ஓ...ஹ..ஓ... ஆ...ஆ

ஆ..ஆ..ஆ...

அவன்தான் நாரணன்

அவதாரம்

அருள் சேர் ஜானகி

அவன் தாரம்

கெளசிக மாமுனி

யாகம் காத்தான்

கெளதமர் நாயகி

சாபம் தீர்த்தான்

ராம நாமம்

ஒரு வேதமே.

ராக தாளமொடு கீதமே

ஆ.....ஆ..ஆ...

ஆ..ஆ..ஆ...ஆ..ஆ...

ஓர் நவமி் அதில்

நிலவெலாம் புலர

நினைவெல்லாம் மலரவே

உலகு புகழ்

தாய் மடியில் ஒரு

மழலையாய் உதிக்க,

மறை எல்லாம் துதிக்கவே....

தயரதனின்

வம்சத்தின் பேர் சொல்ல

வாழ்த்துக்கள் ஊர் சொல்ல

விளங்கிய திருமகனாம்

ஜனகர் மகள்

வைதேகி பூச்சூட

வைபோகம் கொண்டாட

திருமணம் புரிந்தவனாம்

மணிமுடி இழக்கவும்

மரவுரி தரிக்கவும்

அரண்மனை அரியணை

துறந்தவனாம்

இனியவள் உடன்வர

இளையவன் தொடர்ந்திட

வனங்களில் உலவிடத்

துணிந்தவனாம்

ஸ்ரீ..ராம சங்கீர்த்த

நலங்கள் தரும்

நெஞ்சே மனம் இனிக்க

தினம் இசைக்க,

குலம் செழிக்கும்

தினம் நீ சூட்டிடு

பாமாலை....

இது தான்

வாசனைப் பூமாலை

இதைவிட ஆனந்தம்

வாழ்வினில் ஏது..

இசைத்தே நாமமே

நாளும் ஓது

ராம நாமம்

ஒரு வேதமே..

(வீணை இசை)

ஸ நி த ப ம

ராம நாமம்

ஒரு வேதமே..

க ப ம ரி ரி

ஸ நி த ப மா

ஸ ரி க ம த

ராம நாமம்

ஒரு வேதமே..

ப த பாப ப

நித பாப பா

ஸ நி த பாப..பா

க ம த பாப

க ம ப த நீ

ஸா... ஸாஸ ஸரிஸ

நீஸரி ஸரி

ஸஸரரி ஸஸகரி

ஸநிஸரி ஸநித..

ஸரிகம பமகரி

ரிகமப மகரிக

ஸகரிநீ ஸநிதநி

தத பாம கரிஸரி ஸரி

ஸரிஸக ஸமஸப

ஸகஸநி ஸஸ

ஸரி..கமப

மகா மகரி

ஸநிதபம

ராம நாமம்

ஒரு வேதமே...

ராக தாளமொடு

கீதமே...

மனம் எனும் வீணை

மீட்டிடுவோம்...

இசை எனும் மாலை

சூட்டிடுவோம்

அருள்மிகு

ராம நாமம்

ஒரு வேதமே..

ராக தாளமொடு

கீதமே...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்