மௌனமே பார்வையால்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:கொடிமலர்

ஆண்டு:1966

பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை : எம். எஸ். விஸ்வநாதன்

வரிகள்:கண்ணதாசன்

✨✨✨✨✨✨✨✨✨

 மௌனமே பார்வையால்

ஒரு பாட்டுப் பாடவேண்டும்

நாணமே ஜாடையால்

ஒரு வார்த்தை பேசவேண்டும்

மௌனமே பார்வையால்

ஒரு பாட்டுப் பாடவேண்டும்

நாணமே ஜாடையால்

ஒரு வார்த்தை பேசவேண்டும்

{அல்லிக் கொடியே உன் முல்லை இதழும்

தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்} (2)

வர வேண்டும்

அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல்

என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்

என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்

 மௌனமே பார்வையால்

ஒரு பாட்டுப் பாடவேண்டும்

நாணமே ஜாடையால்

ஒரு வார்த்தை பேசவேண்டும்

{முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்} (2)

மொழி வேண்டும்

முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில்

பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

மௌனமே பார்வையால்

ஒரு பாட்டுப் பாடவேண்டும்

நாணமே ஜாடையால்

ஒரு வார்த்தை பேசவேண்டும்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்