ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:பொன்னியின் செல்வன்- 1

ஆண்டு:2022

பாடகர்கள்  : ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் மகேஷ் விநாயக்ராம்

இசை : ஏ. ஆர். ரகுமான்

பாடல்  : கபிலன்

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : முத்தத்துல சித்தத்துல

தித்தித்திட வந்தேன்

உன் நெத்திக்குள்ள

புத்தி வைக்க வந்தேன்

பெண் : முத்தத்துல சித்தத்துல

தித்தித்திட வந்தேன்

உன் நெத்திக்குள்ள

புத்தி வைக்க வந்தேன்

பெண் : ராட்சஸ மாமனே

ராத்திரியின் சூரியனே

கோவைப்பழம் போல

நீ கோபம் கொள்ளாதே

உன் ஆறாம் புத்தி

தேர புத்தி தான் ஓ ஹோ

பெண் : ராட்சஸ மாமனே

ராத்திரியின் சூரியனே

கோவைப்பழம் போல

நீ கோபம் கொள்ளாதே

உன் ஆறாம் புத்தி

தேர புத்திதான்

பெண் : ஹோ வீரன் வீரன் வீரன் வீரன்

எங்க மாமன் வீரன்

ஆலமர வேர போல

ஆழம் ஆன தீரன்

ஆட்டம் காண வைக்க போறான்

ஆட்டுக்குட்டி தேரன்

நாட்டு தலைவன்

மோட்சம் கொள்கிறான்

ஹோ ஓ ஹோ

மீசைவச்ச மிருக மிருகனே

பெண் : முத்தத்துல சித்தத்துல

தித்தித்திட வந்தேன்

உன் நெத்திக்குள்ள

புத்தி வைக்க வந்தேன்

ஆண் : தொம்ச விதம் தொம்ச விதம்

இம்சைமொழி

அம்சமென அம்சமென

வம்ச வழி

வந்தரசன் வந்தரசன்

கம்சமுகன் நான்

ஆண் : நக்கீரனின் நக்கீரனின்

புத்திரனே

நித்தமுடன் நித்தமுடன்

சத்தியனே

முத்து நிகர் முத்து நிகர்

ஒற்றை மகன் நான்

ஆண் : பாலகனே பாலகனே

பாலகனே பாலகனே

ஆண் : அண்டங்களின் அண்டங்களின்

சுற்றுகளை

கண்டங்களை கண்டங்களை

வென்றெடுத்து

கொண்ட ஒரு கொண்ட ஒரு

கோமகன் நான்

ஆண் : என்னிகராய் என்னிகராய்

விண்ணுலகில்

மண்ணுலகில் மண்ணுலகில்

சந்திரனாய்

மந்திரனாய் மந்திரனாய்

வந்தவனோ யார்

ஆண் : கத்தும் கடல் கத்தும் கடல்

எட்டும் தொட

சூரியனை சூரியனை

தொட்டு இட

வட மதுரை வலம் வருவேன் நான்

பெண் : ஹோ ஹோ ஓ ஹோ

எண்ணம் இல்லையா

திண்ணம் இல்லையா

நான் சின்ன பிள்ளையா

நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய

கூச்சமில்லையா

பெண் : தொல்லை செய்வதா

பிள்ளை வைவதா

பள்ளி கொள்வதா

நீ கட்டுமுள்ளில் வெட்டி போல

மாட்டி கொள்வதா

பெண் : ஏ ஐய்யாரே ஐயாறே

ஆடுவோமா குய்யாரே ஹோ

ஏ தையா தையா

த்தையாரே ஹோ

பெண் : ராட்சஸ மாமனே

ராத்திரியின் சூரியனே

கோவைப்பழம் போல

நீ கோபம் கொள்ளாதே

உன் ஆறாம் புத்தி

தேர புத்திதான் ஓ ஹோ

பெண் : ராட்சஸ மாமனே

ராத்திரியின் சூரியனே

கோவைப்பழம் போல

நீ கோபம் கொள்ளாதே

உன் ஆறாம் புத்தி

தேர புத்திதான்

ஆண் : ………………..

பெண் : மாமா மாமா

ராட்சஸ மாமனே…

ஆண் : ………………..

பெண் : மாமா மாமா

மாமா…

நீயா நானா நீயா நானா நீயா நானா ..

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்