ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை

 ✨✨✨✨✨✨✨✨

படம்:இந்திரா

ஆண்டு:1995

பாடகர்கள் : சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம்,

ஜி.வி. பிரகாஷ், ஸ்வேதா மோகன் மற்றும் எஸ்தர்

இசையமைப்பாளர் : 

ஏ. ஆர். ரஹ்மான்

✨✨✨✨✨✨✨✨

பெண் : ஆஆ… ஆஅ…ஆ..

ஆஆ…ஆஅ…ரே ரே ரே

பெண் : விடியாத இரவென்று

எதுவும் இல்லை

குழு : இல்லை இல்லை இல்லை இல்லை

பெண் : முடியாத துயரென்று

எதுவும் இல்லை

குழு : இல்லை இல்லை இல்லை இல்லை

ஆண் : வடியாத வெள்ளமென்று

எதுவும் இல்லை

குழு : இல்லை இல்லை இல்லை இல்லை

ஆண் : வாழாத வாழ்க்கையென்று

எதுவும் இல்லை

குழு : இல்லை இல்லை இல்லை இல்லை

ஆ ரே ரே ரீ….ஆஅ…

குழு : {ஹே அச்சம் அச்சம் இல்லை

இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு

கண்ணீர் மிச்சமில்லையே…

ஏ..ஏ..ஏ…} (2)

குழு : {காலம் மாறிப்போச்சு

நம் கண்ணீர் மாறிப்போச்சு

நாளை நல்ல நாளை என்ற

நம்பிக்கை உண்டாச்சு} (2)

பெண் : ஹே அச்சம் அச்சம் இல்லை

இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு

கண்ணீர் மிச்சமில்லையே…

ஏ..ஏ..ஏ…

குழு : அந்த நிலா நிலா

நிலா நிலா நீ கொண்டோடிவா

ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

அந்த நிலா நிலா

நிலா நிலா நீ கொண்டோடிவா

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன்

என்ன மட்டம்

அட இன்னும் கொஞ்சும் போனாலென்ன

வானம் தலையில் தட்டும்} (2)

பெண் : வாடி இளைய செல்லியே…

குழு : வாடி இளைய செல்லியே

நம் காலம் சொல்லும்

நம்மை வாழ சொல்லியே

பெண் : அம்மா அழகுக் கண்ணம்மா…

குழு : அம்மா அழகுக் கண்ணம்மா

இதை நம்ம பூமி என்று

அழுத்திச்சொல்லம்மா

பெண் மற்றும் குழு :

ஹே அச்சம் அச்சம் இல்லை

இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு

கண்ணீர் மிச்சமில்லையே…

குழு : காலம் மாறிப்போச்சு

நம் கண்ணீர் மாறிப்போச்சு

பெண் : நாளை நல்ல நாளை என்ற

நம்பிக்கை உண்டாச்சு

குழு : லல்லல் லாலூ

பட்டாம்பூச்சி

லல்லல் லாலூ

பட்டாம்பூச்சி

குழு : வானம் பக்கம்

இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்ற

பக்கம் பக்கம் சொர்க்கம்

வானம் பக்கம் இனி

வாழ்க்கை ரொம்ப பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்றா

பக்கம் பக்கம் சொர்க்கம்

குழு : பூமி தொறந்து கிடக்கு

அட மனுச பயமனசு பூட்டிக் கிடக்கு

பூமி தொறந்து கிடக்கு

அட மனுச பயமனசு பூட்டிக் கிடக்கு

குழு : இனி அச்சம் அச்சமில்லை

இனி அடிமை எண்ணம் இல்லை

இனி அச்சம் அச்சமில்லை

இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு

கண்ணீர் மிச்சமில்லையே

பெண் : ஏ ஏ ஏ ஏ…

ஏ…ஏ…ஆ

பெண் : இன்பக்காற்று வீசட்டும்

எட்டுத்திக்கும் பரவட்டும்

குழு : பரவட்டும் பரவட்டும்

பரவட்டும் பரவட்டும்

பெண் : மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள்

இன்னும் விரியட்டும்

குழு : விரியட்டும் விரியட்டும்

விரியட்டும் விரியட்டும்

குழு : இன்பக்காற்று வீசட்டும்

எட்டுத்திக்கும் பரவட்டும்

மனிதப்பூக்கள் மலரட்டும்

மனங்கள் இன்னும் விரியட்டும்

குற்றம் குற்றம் எரியட்டும்

சுற்றம் சுற்றம் வாழட்டும்

வட்டம் வட்டம் விரியட்டும்

வானம் தொட்டு வளரட்டும்

வட்டம் வட்டம் விரியட்டும்

வானம் தொட்டு வளரட்டும்

பெண் : ஆஅ…ஆஆ…ஆஅ…

குழு : கோழிச்சிறகில்

குஞ்சை போலவே

பூமி பந்து உலவட்டும்

ரத்தம் சிந்தா நூற்றாண்டு

புத்தம் புதிதாய் விடியட்டும்

பெண் : ஆஅ…ஆஆ…ஆஅ…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்