உனை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா எனை பார்த்து பார்த்து
✨✨✨✨✨✨✨✨✨
ஐயப்பன் பக்தி பாடல்
✨
பாடியவர்:சீர்காழி சகோதரிகள்
✨✨✨✨✨✨✨✨✨
உனை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால்
அன்னை என்பதா (உ)
✨
உன்னைக் கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த உன்னைத்
தந்தை என்பதா. (உ).
✨
சேரும் செல்வமெல்லாம் உன் அருளன்றோ
பாடும் பாடல் எல்லாம் உன் தயவன்றோ (2)
எந்த நேரமும் உன் நினைவன்றோ
எந்தன் குடும்பமே உன்னை மறக்குமோ
✨
ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
✨
நீ இருக்கின்றாய் அது போதும்
சில நேரம் உன்னை நினைக்கும் போது
கண் கலங்குதப்பா. (உ).
✨
வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே
போகும் பயணம் எங்கே? நானறியேனே(2)
✨
கரையை பார்க்கிறேன் எதுவும் தெரியல
கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல
உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை
✨
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சகலமும் எனக்கு சபரி தானப்பா
✨
என் உயிரில் கலந்து நாவில் புரளும்
எங்கள் ஐயப்பா (உ)
✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்
கருத்துரையிடுக