என்னை தாலாட்ட வருவாளா
💫💫
*என்னை* *தாலாட்ட* *வருவாளோ*
*நெஞ்சில்* *பூ* *மஞ்சம்* *தருவாளோ*
*தங்க* *தேராட்டம்* *வருவாளோ*
*இல்லை* *ஏமாற்றம்* *தருவாளோ*
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
*கொஞ்சம்* *பொறு* *கொலுசொலி* *கேட்கிறதே*
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
*பூ* *விழி* *பார்வையில்* *மின்னல்* *காட்டினாள்*
*ஆயிரம்* *ஆசைகள்* *என்னில்* *ஊட்டினாள்*
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
*காதல்* *தீயை* *வந்து* *மூட்டினாள்*
*நான்* *கேட்கும்* *பதில்* *இன்று* *வாராதா* *நான்* *தூங்க* *மடி* *ஒன்று* *தாராதா*
*தாகங்கள்* *தாபங்கள்* *தீராதா*
*தாளங்கள்* *ராகங்கள்* *சேராதா*
*வழியோரம்* *விழி* *வைக்கிறேன்*
என்னைத்தாலாட்ட வருவாளா ...
*எனது* *இரவு* *அவள்* *கூந்தலில்*
*எனது* *பகல்கள்* *அவள்* *பார்வையில்*
*காலம்* *எல்லாம்* *அவள்* *காதலில்*
*கனவு* *கலையவில்லை* *கண்களில்*
*இதயம்* *துடிக்கவில்லை* *ஆசையில்*
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
*நாளைக்கு* *நான்* *காண* *வருவாளோ* *பாலைக்கு* *நீரூற்றி* *போவாளோ*
*வழியோரம்* *விழி* *வைக்கிறேன்*
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
*கொஞ்சம்* *பொறு* *கொலுசொலி* *கேட்கிறதே*
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
💫💫
படம் : *காதலுக்கு* *மரியாதை*
பாடகர் : *ஹரிஹரன்* & *பவதாரணி*
பாடலாசிரியர் : *பழனி* *பாரதி*
இசை : *இளையராஜா*
💫
கருத்துகள்
கருத்துரையிடுக