ஒரு ராகம் தராத வீணை

💫 ஆண் : *ஒரு* *ராகம்* *தராத* *வீணை* *நல்ல* *காதல்* *சொல்லாத* *பெண்மை* *இந்த* *மண்ணில்* *ஏனடி* *பதில்* *கூறு* *கண்மணி* *இந்த* *மண்ணில்* *ஏனடி* *பதில்* *கூறு* *கண்மணி* *அழகான* *கைகள்* *மீட்டும்* *வேலை* பெண் : ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை பெண் : நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிப்போகும் நாளும் காதல் ராகம் பாடும் பாடும் ஆண் : *இதழில்* *போடும்* *இதழின்* *காயம்* *இதழிலாறும்* *இனிமையாகும்* *தேகம்* *தீண்டும்* *நேரம்* *யோகம்* *யோகம்* பெண் : உன்னை வாழ்த்திப் பாடும் பாடல் உதயராகமோ ஆண் : *நம்மை* *வாழ்த்தும்* *நமது* *உலகம்* *உதயமாகுமோ* பெண் : புது கனவுக் காலம் தெரிந்ததே ஆண் : *நெஞ்சினில்* *இன்பமும்* *கொஞ்சுது* *கெஞ்சுது* பெண் : ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேலை ஆண் : ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை ஆண் : *இளமைக்* *காட்டில்* *இனிமைக்* *கூட்டில்* *இருக்கும்* *தேனை* *எடுக்கும்போது* *காலம்* *நேரம்* *தேவை* *இல்லை* *இல்லை* பெண் : மலையின் ஓரம் மலர்ந்த பூவைப் பறிக்கும் வீரம் இருக்கும்போது காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை ஆண் : *மானும்* *மீனும்* *சேர்ந்து* *மாயம்* *செய்வதேனடி* பெண் : பானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா ஆண் : அட மனதில் சாரல் அடித்ததா பெண் : கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது ஆண் : ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை பெண் : இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேலை ஆண் : ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை பெண் : புது ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை 💫 படம் : *உன்னை* *வாழ்த்தி* *பாடுகிறேன்* பாடகர் : *ஜேசுதாஸ்* & *ஜானகி* பாடலாசிரியர் : *மு.மேத்தா* இசை : *இளையராஜா*

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்