ஒத்தயடி பாதையில
ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு
ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு
உச்சி மல தோப்புக்குள்ள
ஒரு பூவு பூத்ததம்மா
குச்சு வீட்டு சாமி நெஞ்சில்
குடி போக பாத்ததம்மா
உச்சி மல தோப்புக்குள்ள
ஒரு பூவு பூத்ததம்மா
குச்சு வீட்டு சாமி நெஞ்சில்
குடி போக பாத்ததம்மா
பச்ச மண்ண போலதான் பால்மனசு தவிச்சதம்மா
பாக்கு வச்சு பரிசம் போட்ட
பாதையைதான் வெறுத்ததம்மா
சாமி போட்ட முடிச்சு ஒன்னு
சாதி சனம் பிரிச்சதம்மா
ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு
முத்து மணி மாலை ஒன்னு
தினந்தோறும் கோர்த்து வச்சேன்
பொத்தி பொத்தி மனசுக்குள்ள
பூப்போல காத்து வச்சேன்
முத்து மணி மாலை ஒன்னு
தினந்தோறும் கோர்த்து வச்சேன்
பொத்தி பொத்தி மனசுக்குள்ள
பூப்போல காத்து வச்சேன்
கத்தியில் கால வச்சு
காதல் வழி நடத்த வந்தேன்
காட்டாத்து தண்ணியில
மீனு ஒன்னு புடிக்க வந்தேன்
கண்ணு ரெண்டகட்டிக்கிட்டு
கண்ணாடியை பாக்க வந்தேன்
ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு
ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு உசுரு
வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு
கருத்துகள்
கருத்துரையிடுக