கண்ணால் பேசும்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களைத் தீரடி கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன் பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன் மெளனம் பேசும் போது சப்தம் கேட்க மாட்டேன் மூன்றாம்பிறையின் முன்னே நிலவைத் தேட மாட்டேன் வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி ஹோ கண்ணில் கடல் கொண்ட கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும் பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும் காரப் பார்வை வேண்டாம் ஓரப் பார்வை போதும் வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும் வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry Oh I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களைத் தீரடி கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்