கருப்பு நிலா

கருப்பு நிலா... கருப்பு நிலா... கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
 துளித் துளியா கண்ணீர் விழுவது ஏன் சின்ன மானே மாங்குயிலே 
ஓம் மனசுல என்ன கொற 
பெத்த ஆத்தா போல் இருப்பேன் 
இந்த பூமியில் வாழும் வர 
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீ தானே……
(கருப்பு நிலா) 
பத்து மாசம் மடி ஏந்தி 
பெத்தெடுத்த மகராசி 
பச்சப் புள்ள ஒன்ன விட்டு 
போனதெண்ணி அழுதாயா 
மாமன் வந்து எனைக் காக்க 
நானும் வந்து உனை காக்க 
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
 நாளை வரும் நமக்காக 
காலம் உள்ள காலம் வாழும் இந்தப் பாசம்
 பூ விழி இமை மூடியே சின்னப் பூவே கண் உறங்கு 
(கருப்பு) 
வண்ண வண்ண முகம் காட்டி 
வானவில்லின் நிறம் காட்டி
 சின்னச் சின்ன மழலை பேசி 
சித்திரம் போல் மகனே வா 
செம்பருத்தி மலர் போலே
 சொக்க வெள்ளி மணி போலே
 கன்னம் ரெண்டும் மின்ன மின்ன கண்மணியே மடி மேல் வா 
பாட்டு தமிழ் பாட்டு பாட அதக் கேட்டு 
ஆடிடும் விளையாடிடும் தங்கத் தேரே நீதானே..(கருப்பு)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்