மணமாலையும் மஞ்சளும்
படம்:வாத்தியார் வீட்டுப் பிள்ளை
ஆண்டு:1989
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
ஆண் : அண்ணன் விழிகள்
கண்ணீர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
ஆண் : தாழம்பூ கைகளுக்கு
தங்கத்தில் செய்த காப்பு
வாழைப்பூ கைகளுக்கு
வைரத்தில் செய்த காப்பு
ஆண் : உன் அண்ணன் போட வேண்டும்
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே
கச்சேரி வைக்கவேண்டும்
ஆண் : சின்னஞ்சிறு கிளியே வா…ஆஅ
செம்பவழ கொடியே வா…..ஆஅ….
பிறை போல் நுதலில் அணியும் திலகம்
நிலையாய் வாழட்டுமே
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
ஆண் : ஓராண்டு போனப் பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
தாய் மாமன் தோளில் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று
ஆண் : ஏதேதோ காட்சி வந்து
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று
நெஞ்சுக்குள் ஓடுதம்மா
ஆண் : குங்குமத்து சிமிழே வா…..ஆ
சங்கம் தந்த தமிழே வா…..ஆஅ
கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த
மலரே நீ வாழ்கவே
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
ஆண் : அண்ணன் விழிகள்
கண்ணீர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
கருத்துகள்
கருத்துரையிடுக