கல்லாலே செஞ்சு வச்ச

🎼🎼🎼🎼🎼🎼 ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ ஆண் : *எனக்காக* *மண்ணில்* *வந்த* *எனக்காக* *இந்த* *மண்ணில்* *வந்த* *என்* *தங்கமே* *வைரமே* *செல்லமே* ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ ஆண் : கன்னுக்குட்டி நீ துள்ளி ஓடினா கண்ணுப்பட்டுடும் சொன்ன சொல்ல கேளம்மா *தேரு* *வந்து* *நின்னாக்கூட* *நீ* *அழகு* *மின்னல்* *வந்து* *போனாக்கூட* *நீதான்* *அழகு* ஆண் : அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் எங்கம்மாவ அப்போ அப்போ நெனச்சுக்குவேன் *நீ* *செய்கூலி* *சேதாரம்* *இல்லாத* *என்* *தங்கமே* *வைரமே* *செல்லமே* ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ ஆண் : *மண்ணில்* *விழுந்த* *மழைத்துளி* *நீ* *என்* *கண்ணில்* *இருக்கும்* *கருவிழி* *நீ* பொட்டு வச்ச சித்திரமே நீ எனக்கு போதும் வட்ட நிலா நீதான் என்று உன் அழக பாடும் ஆண் : யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் நான் எப்போ எப்போ கேட்டாலும் நீ வரம் தரணும் *நீ* *வேணும்* *நிழலாக* *வாழ்வோடும்* *என்* *தங்கமே* *வைரமே* *செல்லமே* ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ ஆண் : எனக்காக மண்ணில் வந்த எனக்காக இந்த மண்ணில் வந்த என் தங்கமே வைரமே செல்லமே ஆண் : ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம் 💫💫 படம் : *சித்திரையில்* *நிலாச்சோறு* பாடகர் : *ஹரிசரண்* பாடலாசிரியர் : *வாலி* இசை : *இளையராஜா* 💫

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்