நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு

 ✨✨✨✨✨✨✨

படம்:காற்றின் மொழி

இசை :A. H.காஷிஃப்

வரிகள்:மதன் கார்கி

பாடகர்: ஸித் ஸ்ரீராம்

ஆண்டு: 2018

✨✨✨✨✨✨


நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு

நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று

நான் என் கூறல் நனையாத மௌனங்கள்

நான் நம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்


உன் புன்னகையின் பின்னணியில்

சிலரில் சோகம் எப்போதும்

யாரென்றே நீ அறியா

இதயங்களில் மழையானாய்

நான் என்றே கண்டும் ஏன்

பொழியாமல் நீங்கி போனாய்


போ உறவே என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள் துரத்தியே

போ உறவே சிறகு அணிந்து

நீ உந்தன் கணங்களை உதறியே


போ உறவே என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள் துரத்தியே

போ உறவே சிறகு அணிந்து

நீ உந்தன் கணங்களை உதறியே


மாற்றங்கள் அதையும்

தூரங்கள் இதையும்

என் சிறு இதயம் பழகுதடி

நீ அற்ற இரவு

வீட்டுக்குள் துறவு

ஏன் இந்த உறவு விலகுதடி


இது நிலை இல்லை

வெறும் மழை என்றோ

இது மழை இல்லை

சிறு மழை என்றோ


இந்த நொடிகள் கனவே எனவே உறவே

சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு


போ உறவே என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள் துரத்தியே

போ உறவே சிறகு அணிந்து

நீ உந்தன் கணங்களை உதறியே


போ உறவே என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள் துரத்தியே

போ உறவே சிறகு அணிந்து

நீ உந்தன் கணங்களை உதறியே


போ உறவே


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்