அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்

 அதிகாலை நேரம் 

கனவில் உன்னைப் பார்த்தேன்

அது கலைந்திடாமல்

கையில் என்னை சேர்த்தேன்


விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே..ஹோய்..

உன்னை சேர்ந்திடாமல்

வாடும் இந்த அன்பிலே..ஹோய்..  லல..லாலலால..லாலலால...


முல்லைப் பூவை மோதும்

வெண் சங்கு போல ஊதும்

காதல் வண்டின் பாட்டு

காலம் தோறும் கேட்டு


வீணை போல உன்னை

கை மீட்டும் இந்த வேளை

நூறு ராகம் கேட்கும்

நோயை கூட தீர்க்கும்


பாதி பாதியாக சுகம்

பாக்கி இங்கு ஏது

மீதமின்றி தந்தாள்

என்னை ஏற்றுக் கொண்ட மாது


தேவியை மேவிய ஜீவனே நீதான்

நீ தரும் காதலில்

வாழ்பவள் நான்தான் 

நீயில்லாமல்

நானும் இல்லையே


அதிகாலை நேரம் கனவில் 

உன்னை பார்த்தேன்

அது கலைந்திடாமல்

கையில் என்னை சேர்த்தேன்


விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே..ஹோய்..

உன்னை சேர்ந்திடாமல்

வாடும் இந்த அன்பிலே..ஹோய்..


அதிகாலை நேரம் 

கனவில் உன்னைப் பார்த்தேன்


மாலை ஒன்று சூடும்

பொன் மேனி ஆறும் சூடு

மாதம் தேதி பார்த்து

மனது சொல்லி கேட்டு


வேளை வந்து சேரும்

நம் விரகம் அன்று தீரும்

நீண்டகால தாகம்

நெருங்கும் போது போகும்


காடு மேடு ஓடி 

நதி கடலில் வந்து கூடும்

ஆசை நெஞ்சம் இங்கே

தினம் அனலில் வெந்து வாடும்


வாடலும் கூடலும்

மன்மதன் வேலை

வாழ்வது காதல்தான்

பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்மபந்தம் 

அல்லவோ


அதிகாலை நேரம்

கனவில் உன்னைப் பார்த்தேன்

அது கலைந்திடாமல்

கையில் என்னை சேர்த்தேன்


விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே..ஹோய்..

உன்னை சேர்ந்திடாமல்

வாடுகின்ற அன்பிலே ஹோய்... 

லல...லாலலால...லாலலால..."

~~~~~~~~~~~💢🔸️💢~~~~~~~~~~

💢படம் நான் சொன்னதே சட்டம் (1988)

💢இசை இளையராஜா 

💢பாடியவர்கள் ஆஷா போஸ்லே மற்றும் S.P.பாலசுப்ரமணியம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்