பூவே பனிப் பூவே நானும் மலர்தானே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: நிலவு சுடுவதில்லை

ஆண்டு:1984

இசை:இளையராஜா

வரிகள்:M.G.வல்லபன்

✨✨✨✨✨✨✨✨✨

பூவே பனிப் பூவே

நானும் மலர்தானே

பூந்தளிர் தாளங்கள் போடும்

புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்

பூந்தளிர் தாளங்கள் போடும்

புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்

பூவே பனிப் பூவே

நானும் மலர்தானே

என் மேனியே இளம்

பனியில் வேகுது

உன்னோடு பேசவே

மொழியும் நாணுது

என் மேனியே இளம்

பனியில் வேகுது

உன்னோடு பேசவே

மொழியும் நாணுது

பூக்கோலம் கண்ணில் கண்டு

ஏங்குதே மனம்

பார்க்காத நாளில்

நெஞ்சம் தூங்குமா இனி

கண்ணோடு சல்லாபம்

எந்நாளும் உல்லாசம்

பூந்தளிர் தாளங்கள் போடும்

புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்

பூவே பனிப் பூவே

நானும் மலர்தானே

காதோரம் ஆயிரம் கதை

நான் கூறுவேன்

ஏழேழு ஜென்மமும்

உனைத்தான் பாடுவேன்

காதோரம் ஆயிரம் கதை

நான் கூறுவேன்

ஏழேழு ஜென்மமும்

உனைத்தான் பாடுவேன்

உன் மாலை மார்பில்

சூடும் நாளைத் தேடியே

பொன் மேக வானில்

பாடும் வானம்பாடி நான்

நெஞ்செல்லாம்..ஆ..

சங்கீதம்

நாளெல்லாம்.ஆ..

சந்தோஷம்

பூந்தளிர் தாளங்கள் போடும்

புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்

பூவே பனிப் பூவே

நானும் மலர்தானே

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்