சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: நீதிக்கு தண்டனை 

பாடியவர்கள்: ஜேசுதாஸ் – சுவர்ணலதா

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

வரிகள்: பாரதியார்

✨✨✨✨✨✨✨✨✨

 சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா


செல்வக் களஞ்சியமே..ஏ..

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்..

 சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே..ஏ..

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்

 சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா


செல்வக் களஞ்சியமே..ஏ...ஏ..

செல்வக் களஞ்சியமே..


 பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா


பேசும் பொற்சித்திரமே..ஏ..

 பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமே..ஏ..

 அள்ளியணைத்திடவே என்முன்னே

ஆடிவரும் தேனே..

தேனே..ஆடிவரும் தேனே

 சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா


செல்வக் களஞ்சியமே..ஏ...

செல்வக் களஞ்சியமே..


 உச்சிதனை முகர்ந்தால் கருவம்


ஓங்கி வளருதடி

உச்சிதனை முகர்ந்தால் கருவம்

ஓங்கி வளருதடி


மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால்


மேனி சிலிர்க்குதடி..ஈ..

மேனி.. சிலிர்க்குதடி... சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா


செல்வக் களஞ்சியமே..ஏ..

செல்வக் களஞ்சியமே


கன்னத்தில் முத்தமிட்டால்


உள்ளந்தான்..

கள்வெறி கொள்ளுதடி

கன்னத்தில் முத்தமிட்டால்

உள்ளந்தான்..

கள்வெறி கொள்ளுதடி

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா

உன்மத்த மாகுதடி..ஈ...

உன்னை தழுவிடிலோ.. கண்ணம்மா

உன்மத்த மாகுதடி..ஈ..

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே..ஏ..

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்.. சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா


செல்வக் களஞ்சியமே..ஏ...

செல்வக் களஞ்சியமே


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்