தீபங்கள் பேசும்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : தேவதை

பாடல் : தீபங்கள் பேசும்

வரிகள் : அறிவுமதி

குரல் : S.P.B.சரண், சந்தியா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨


தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்

மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே

அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே


முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு

முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்தில

பக்கத்துல நெருப்பா அத்த மகன் இருக்கான்

முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல

(தீபங்கள் பேசும்)


முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய

கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய

முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய

கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய

என்னோட தாலாட்டி வந்தாடும் பூங்காற்று

பொன்னான நாள் பார்த்து

கொண்டாடும் கை கோர்த்து

குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்று தானோ

(தீபங்கள் பேசும்)


லாலாலா லாலாலா

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வானவிளக்கு

இருக்கும்போது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு

கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே


கவிதைஎன்னும் சிறகு

கொண்டு பறக்க வேண்டும் இனியே

வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம்

கண்ணிமையே ஓடாதே என் கனவை தேடாதே

அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ !!!!


(தீபங்கள் பேசும்)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்