நீல குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்..

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மகுடி

இசை:இளையராஜா

பாடியவர்கள்:S.P.B & S.ஜானகி

வரிகள்:வாலி

ஆண்டு:1984

✨✨✨✨✨✨✨✨

பெண்:-கபகரிசா ரிஸசதச..

ஆண்:-கபகரிசா ரிஸசதச....

பெண்:-சரிகபகரி கபகரி சரிசா....

ஆண்:-சரிகபகரி கபகரி சரிசா....

பெண்:-கபதப கபகரி சரிகபசா ....

ஆண்:-கபதப கபகரி சரிகபசா...

பெண்:-தபதபதப....

ஆண்:-கபதபதப....

பெண்:-தபதபதப....

ஆண்:-கபதபகப ...

இருவரும்:-ஸாஆஆஆஆஆஆ...


பெண்:- நீல குயிலே உன்னோடு நான்

பண் பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்,

இந்நாளிலே சங்கீதமும்

சந்தோசமும் ஒன்றானதே

உள்ளம் பாமாலை பாடுதே...


ஆண்:- நீல குயிலே உன்னோடுநான்

பண் பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம்

நான் நீராடுவேன்,

இந்நாளிலே சங்கீதமும்

சந்தோசமும் ஒன்றானதே

உள்ளம் பாமாலை பாடுதே,


பெண்:- நீல குயிலே உன்னோடு நான்

பண் பாடுவேன்

ஆண்:- நாதப்புனலில் அன்றாடம்

நான் நீராடுவேன்......

பெண்:- அதிகாலை நான் பாடும் பூபாளமே

ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு,.

ஆண்:- நாள்தோறும் நான் பாடும் தேவாரமே

நீங்காமல் நீ வந்து நெஞ்சை அல்லு,

பெண்:- ஆகாயம் பூமி ஆனந்த காட்சி

ஆண்:- சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி

பெண்:- திசைகளில் எழும் புது

இசை அமுதே வா வா.....

ஆண்:- நீல குயிலே உன்னோடு

நான் பண் பாடுவேன்

பெண்:- நாதப்புனலில் அன்றாடம்

நான் நீராடுவேன்..,

ஆண்:- இந்நாளிலே சங்கீதமும்

சந்தோசமும் ஒன்றானதே..

பெண்:- உள்ளம் பாமாலை பாடுதே...

ஆண்:- நீல குயிலே உன்னோடு

நான் பண் பாடுவேன்

பெண்:- நாதப்புனலில் அன்றாடம்

நான் நீராடுவேன்......

பெண்:- நீர் கொண்டு போகின்ற கார்மேகமே

தூரல்கள் நீ போட தாகம் தீரும்...

ஆண்:- நதி பாயும் அலையோசை சுதியாகவே

நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்...

பெண்:- மலர்கூட்டம் ஆடும்

மலைச்சாரல் ஓரம்...

ஆண்:- பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்

பெண்:- செவிகளில் விழும்

சுற லய சுகமே...வா. வா...

நீல குயிலே உன்னோடு

நான் பண் பாடுவேன்..

ஆண்:- நாதப்புனலில் அன்றாடம்

நான் நீராடுவேன்...

பெண்:- இந்நாளிலே சங்கீதமும்

சந்தோசமும் ஒன்றானதே...

ஆண்:- உள்ளம் பாமாலை பாடுதே...

பெண்:- நீல குயிலே உன்னோடு

நான் பண் பாடுவேன்...

ஆண்:- நாதப்புனலில் அன்றாடம்

நான் நீராடுவேன்......

பெண்:-ஆ..ஆ.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்